இருண்ட காலத்தின் இலக்கியச் செல்நெறி
1989 இலங்கையின் உள்நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் இது. இந்திய அமைதிப்படை- கூடச் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் ஒட்டுண்ணிக் குழுக்கள்- என்பன கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொண்டிருந்த கொலை-கொள்ளை-ஆட்கடத்தல்-ஹர்த்தால்- போன்ற அராஜகச் செயற்பாடுகள் தலை விரித்தாடிக் கொண்டிருந்த காலம் இது.
இச்சமயம், தென்கிழக்கின் பல முஸ்லிம் ஊர்களிலும் பரவலாக நடந்து கொண்டிருந்த கலவரங்களில், 1989.11.17 ம் திகதி நிகழ்ந்த இனப்படுகொலைகள் உச்சக்கட்டக் கொடுமை ஆகும்.
இதற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க ஊடகங்கள் இல்லை.. அச்சகம் இல்லை-கடதாசி இல்லை- மனதுக்குள் குமைந்து வெம்பித் திரிந்த கவிஞர்களின், கவிதைகளை தொகுத்து ஓர் ஆவணமாக்க கல்முனை புகவம் அமைப்பு துணிந்தது.
இதற்காக, ஒரு தனியார் வீட்டில் பரிட்சை பேப்பர்கள் அச்சடித்துக் கொண்டிருந்த ஒரு ஆசிரியரின் தயவில், எமது சில கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து றோணியோ அச்சில் வெளியிட்டோம்.
இதில் எழுதிய கவிஞர்கள் அப்போது உயிர் அச்சம் காரணமாக புனை பெயர்களில் எழுதினர். இப்போது அனைவரும் பிரபல்யமானவர்கள்.
அதற்கு, இன்னாலில்லாஹி என்று நாமம் சூட்டினோம். அதன் பிரதிகள் யாவும் காலப் போக்கில் தொலைந்து போயின. எனினும் காலம்சென்ற பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூருல் ஹக் அவர்களின் ஆவணச் சேகரிப்பில் கிடந்த ஒரே ஒரு நைந்து போன பிரதியை அன்னாரது துணைவியாரான ஹுனுப்பிட்டி கமர்ஜான் பீபி அவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தேடித் பிடித்து எமக்குத் தந்து உதவினார். அன்னாருக்கு மிக்க நன்றிகள்.
அந்த றோணியோ பிரசுரத்தில் உள்ள சில கவிதைகளையும் அதன் பக்கங்களையும் இத்தளத்தில் பதிவேற்றியுள்ளோம்...
No comments:
Post a Comment